கோத்தபாயவின் மேடையில் முத்தையா முரளிதரன்! அழுத்தத்தையும் மீறிச் சென்றமையால் சர்ச்சை

Report Print Vethu Vethu in சமூகம்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் கலந்து கொண்டுள்ளனர்.

கோத்தபாயவின் வியத்மக மாநாடு இன்று மாலை கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றது. இளைஞர்களுக்கான இந்த மாநாட்டில் முரளிதரன் பங்கேற்றுள்ளார்.

வியத்மக அமைப்பானது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தலைமையில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என முரளிதரனுக்கு பல்வேறு தரப்பினால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனினும் அதனை மீறி முத்தையா முரளிதரன் மாநாட்டில் கலந்து கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு உரையாற்றிய முத்தையா முரளிதரன், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சி செய்ய வேண்டும். சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்கக் கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும்.

இலங்கையில் சில விடயங்களை சாதித்த மக்களை பாதுகாக்ககூடிய ஒருவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Latest Offers