மஸ்கெலியாவில் சிறப்பாக இடம்பெற்ற மாபெரும் கண் பரிசோதனை முகாம்

Report Print Kanmani in சமூகம்

மலையக மக்களுக்கான மாபெரும் கண் பரிசோதனை முகாமொன்று இன்று மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த முகாமினை எல்.பீ.ஆர் பவுண்டேசன் அதாவது லிபாரா என அழைக்கப்பட்ட நிறுவனம் தனது பங்காளி நிறுவனமான டீ லீப் விசன் உடன் இணைந்து இந்த கண் பரிசோதனை முகாமினை ஏற்பாடு செய்துள்ளது.

மஸ்கெலியா - சாமிமலை வீதியில் அமைந்துள்ள மஸ்கெலியா டீ லீப் விசன் பாடசாலையில் காலை 9.00மணி தொடக்கம் பி.ப 4.30மணி வரை இந்த முகாமினை ஒழுங்கு செய்திருந்ததோடு , பிரசித்திபெற்ற மருத்துவர் குழுவால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் கண்கள் பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எல்.பீ.ஆர் நிறுவனம் நோர்வே ஒஸ்லோ போய்ஸ் பவுண்டேசனின் அன்பளிப்பு நிதியினைக்கொண்டு மலையக மக்களுக்கான கண் பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் இலவசமாக மேற்படி நிறுவனத்தால் கண்படல சத்திர சிகிச்சை மற்றும் மூக்கு கண்ணாடி பெறுதல் போன்ற சேவைகளை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.