உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கான விசேட அறிவித்தல்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுவெடிப்பில் காயமடைந்த அல்லது குடும்ப உறுப்பினரை இழந்த அவுஸ்திரேலிய பிரஜைகள் இழப்பீடு கோரி இலங்கை அரசாங்கத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தி கார்டியன் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21ம் திகதி தற்கொலை குண்டுவெடிப்புகள் பயங்கரவாத செயலாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவுஸ்திரேலிய உள்விவகார உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இது இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்கிறது, என்று கூறினார்.

இந்நிலையிலேயே அவுஸ்திரேலிய பிரஜைகள் இழப்பீடு கோரி இலங்கை அரசாங்கத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தி கார்டியன் தெரிவித்துள்ளது.

இதன்படி பாதிக்கப்பட்ட ஒருவர் 75,000 அமெரிக்க டொலர் வரை இழப்பீட்டை கோரலாம் என குறிப்பிடப்படுகிறது.