யாழில் நிதியமைச்சின் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயம்

Report Print Sumi in சமூகம்

என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா 2019 தேசிய கண்காட்சி நிகழ்வுக்கு வருகை தந்திருந்த நிதியமைச்சின் வாகனம் இன்று மதியம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் மூவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிதியமைச்சின் வாகனம் நீர்வேலி கந்தசுவாமி கோயில் பகுதியில் உள்ள பாதசாரிகள் கடவையில் திருப்ப முற்பட்ட வேளை முச்சக்கர வண்டியுடன் மோதி அருகிலிருந்த மதில் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது பேருந்துக்காக காத்து நின்ற மூவர் விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.