கிளிநொச்சியில் உயிருக்கு போராடிய தமிழ் குடும்பத்தை காப்பாற்றிய இராணுவத்தினர்!

Report Print Vethu Vethu in சமூகம்

கிளிநொச்சியில் சேற்றில் புதையுண்ட நிலையில் உயிருக்கு போராடிய மூன்று பேரை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர்.

நேற்று முன்தினம் பூநகாி- அரசபுறக்குளத்தில் நீராட சென்றிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேற்றில் புதையுண்டு மயக்கமடைந்திருந்த தாய் மற்றும் இரு பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டு பூநகரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக அவர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்னளர்.

பூநகரி நான்காம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

Latest Offers