ஐ.தே.கவில் வெற்றி பெறும் வேட்பாளரை நியமித்தால் அவருக்கு ஆதரவளிக்கப்படும்: திகாம்பரம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் வெற்றி பெறும் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் பட்சத்தில் அவருக்கு எமது ஆதரவு வழங்கப்படும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பீட்று ஸ்கிராப் தோட்டத்தில் 50 தனி வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஏழு பேர்ச் காணியில் இந்த வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, குடிநீர் வசதி, மின்சாரம், போக்குவரத்து வசதி என்பன அமைத்து கொடுக்கப்படவுள்ளது.

எதிர்காலத்தில் மூன்று தேர்தல்கள் இடம்பெறும், முதலாவதாக ஜனாதிபதி தேர்தல், இரண்டவதாக நாடாளுமன்ற தேர்தல், மூன்றாவதாக மாகாண சபை தேர்தல் போன்ற இடம்பெறும்.

இதன்போது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்கும் போது மீண்டும் இந்த அரசாங்கம் ஆட்சியமைக்கும். அவ்வாறு ஆட்சியமைக்கும் பட்சத்தில் இன்னும் பல அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். வீடமைப்பு திட்டம் என பல அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கம்பரெலிய வேலைத்திட்டத்தின் கீழ் இருபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஸ்கிராப் தோட்டத்திற்கு செல்லும் வீதி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி, மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம். உதயகுமார், எம். ராம், நுவரெலியா மாநாகர சபையின் பிரதி மேயர் யதர்சனா புத்திரசிகாமணி, அமைச்சின் ஆலோசகர் வாமதேவன், மலையக அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் சந்ராசாப்ட், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You May Like This Video


Latest Offers