இலங்கையில் முடங்கி போன அரச சேவைகள்! தவிக்கும் மக்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

நாடாளவிய ரீதியில் அரச நிர்வாக சேவையை சேர்ந்த சகல ஊழியர்களும் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில் சென்று சேவைக்கு சமூகமளிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில், அரசாங்க நிறுவனங்களின் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையினால் மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் அரச நிர்வாக சேவை அதிகாரிகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள முரண்பாடு உட்பட சில காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் போராட்டம் காரணமாக தேசிய அடையாள அட்டை வெளியிடும் நடவடிக்கை உட்பட பல முக்கிய நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படும் என அரச நிர்வாக சேவை சங்கத்தின் செயலாளர் ரோஹன டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு காரணமாக கற்கை நடவடிக்கைகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை நியாயமற்றது என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.