முச்சக்கரவண்டியுடன் மோதிய இராணுவ கெப் வாகனம்! இருவர் வைத்தியசாலையில்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதியின் தம்பலகாமம் சந்தியில் இராணுவ கெப் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்றிரவு ஒன்பது முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த தம்பலகாமம், பாரதிபுரம் பகுதியை சேர்ந்த இப்பவே சித்தரவேல் லோகராணி (52 வயது) மற்றும் முருகேசு சித்தரவேல் (54 வயது) ஆகியோரே படுகாயடைந்துள்ளதாக தெரியவருகிறது.

கந்தளாயில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இராணுவ கெப் வாகனம், முச்சக்கரவண்டியுடன் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் இராணுவ கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை இன்றைய தினம் கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.