முள்ளிவாய்க்காலில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு! விசாரணைகளில் வெளிவந்துள்ள விடயம்

Report Print Mohan Mohan in சமூகம்

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தனியார் காணி ஒன்று துப்பரவு செய்யப்பட்டு தீ மூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலத்தில் புதைந்திருந்த வெடிகுண்டு ஒன்று வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக நேற்று இரவு வெடித்து சிதறியதுடன் அருகில் இருந்த பணங்கூடலில் தீப்பரவல் ஏற்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.