பெண்ணாக மாறிய ஆண்! பிரதேச மக்களிடம் சிக்கிய இளைஞன்

Report Print Vethu Vethu in சமூகம்

குருந்துவத்தை பிரதேசத்தில் பெண் போன்று வேடமிட்டு முச்சக்கரவண்டியில் பயணித்த ஆண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதான இளைஞனை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அழகு கலை நிலையத்திற்கு சென்று போலி தலை முடி அணிந்து பெண் போன்று வேடமிட்டு முச்சக்கர வண்டி ஒன்றை ஓட்டிச் சென்றுள்ளார். இதற்காக 8000 ரூபாவை செலவிட்டுள்ளார்.

வெலிகமயில் இருந்து அக்மீமன வரை பயணித்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இளைஞன் குருந்துவத்தை பிரதேசத்திற்கு சென்று அந்த பிரசேதத்தில் உள்ள வீட்டில் வசிக்கும் நபர்கள் தொடர்பில் தகவல் கேட்டுள்ளார்.

இதன்போது அவர் அணிந்திருந்த போலி முடி காற்றில் பறந்து சென்றுள்ளது. இதனையடுத்து பிரதேச மக்களால் அவர் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியிலுள்ள தனது காதலியை கண்டுபிடிப்பதற்காக இவ்வாறு பெண் வேடத்தில் சென்றதாக குறிப்பிடப்படுகிறது.