பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

கொத்தட்டுவ பகுதியில் பல்வேறு வகை போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவில் இணைக்கப்பட்ட அதிகாரிகளால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 2 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா, 50 போதை மாத்திரைகள் மற்றும் 'ஐஸ்' என அடையாளம் காணப்பட்ட 100.4 கிராம் போதைப்பொருள் இதன் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வெல்லம்பிட்டியில் வசிக்கும் 30 வயதுடையவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Latest Offers