நீதிமன்றத்தில் சரணடைந்த புளுமெண்டால் சங்கா

Report Print Steephen Steephen in சமூகம்

கொலைகள் உட்பட பல குற்றச்செயல்கள் சம்பந்தமாக தேடப்பட்டு வந்த புளுமெண்டால் சங்கா நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

நீதிமன்றத்தில் சரணடைந்த அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

புளுமெண்டால் சங்கா, இன்று புதுக்கடை இலக்கம் 4 நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். பல குற்றச் செயல்கள் சம்பந்தமாக பொலிஸார் சங்காவை தேடிவந்தனர். அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்ற சங்கா, தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, முகாமில் தடுத்து வைத்திருந்த நிலையில், அவர் அண்மையில் அங்கிருந்த தப்பித்து இலங்கை வந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.