கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கான அதிபர் விடுதி பாவனைக்காக கையளிப்பு

Report Print Suman Suman in சமூகம்

அயல் பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் 6.3 மில்லியன் நிதியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கான அதிபர் விடுதி இன்று பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய முதல்வர் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டடத்தினை திறந்து வைத்துள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கருத்து தெரிவிக்கையில்,

2020ஆம் ஆண்டு மாதிரி பாடசாலை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளன.

அதற்காக கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தையே நான் அடையாளம் காட்டியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

தீவகம்

தீவகத்தில் இருவேறு பாடசாலைகளின் கட்டடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று திறந்து வைத்துள்ளார்.

வேலணை தெற்கு துறையூர் ஐயனார் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம்,பூங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் அதிபர் விடுதி என்பன இதன்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், பிரதேச சபையின் உறுப்பினர்களான அசோக்குமார், பார்த்தீபன், நாவலன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

அயல் பாடசாலை சிறந்த பாடசாலை எனும் செயற்திட்டத்தின் கீழ் இரண்டு பாடசாலைகளினதும் கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.