முல்லைத்தீவு நீதிமன்றில் ஊடகவியலாளர் தவசீலனின் வழக்கு விசாரணை

Report Print Theesan in சமூகம்

முல்லைத்தீவு ஊடகவியலாளரான சண்முகம் தவசீலனின் வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது.

இவ்வழக்கு விசாரணை கடந்த மாதம் 30ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில், இன்றையதினம் நீதிமன்றில் ஊடகவியலாளர் மற்றும் கடற்படை சிப்பாய் ஆகியோரை ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அத்துடன் பொலிஸாரை மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது.

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது கடற்படை அதிகாரி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதையடுத்து கடந்த வழக்கின் போது தவசீலன் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.