கிளிநொச்சியில் பாடசாலை கட்டிடத்தை திறந்து வைத்தார் சி.சிறீதரன்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வு பாடசாலை முதல்வர் ரவீந்திரன் தலைமையில் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

அயல் பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் 6.3 மில்லியன் ரூபாய் நிதியில் அதிபர் விடுதி கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சி.சிறீதரன் கருத்து தெரிவிக்கையில், 2020ஆம் ஆண்டு மாதிரி பாடசாலை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்காக கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தையே தான் அடையாளம் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.