எதிர்காலம் தெரியாத மகள் - நிகழ்காலம் தெரியாத தாய்! இப்படி ஒரு பெரும் துயரம்

Report Print Dias Dias in சமூகம்

யுத்தத்தின் வடுக்களின் சாட்சியாய் இன்றும் பலர் தம் அன்றாடத்தேவைகளை பொருளாதார ரீதியில் நிறைவு செய்ய முடியாதவர்களாய் இன்னுமொருவரில் தங்கி வாழும் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

இத்தகையவர்களின் நிலை கண்டு உதவிக்கரம் நீட்ட வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

நிகழ்காலம் தெரியாத தாயின் எதிர்காலம் தெரியாத மகள் இவர்களுக்கு துணையாய் வாழ்வின் இறுதி நாட்களை எண்ணியபடி வாழும் பாட்டி என வாழும் ஒரு குடும்பம்.

பௌதீக தேவைகள் முதல் கொண்டு உணவுத்தேவைகள் வரை வேறொருவரையே இவர்கள் சார்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு போரின் வடுக்களை சுமந்து வாழும் 3 தலைமுறை பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்து வெளியுலகிற்கு தெரியவைத்துள்ளது என் இனமே என் சனமே நிகழ்ச்சி.

Latest Offers