இனவாதத்தை தூண்டுவது ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம்

Report Print Steephen Steephen in சமூகம்

இனவாதத்தை தூண்டுவது தனியார் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் என முன்னிலை கட்சியின் தலைவர் தீப்தி குணரத்ன தெரிவித்துள்ளார்.

இனவாத உணர்வுகளை தூண்டுவதன் மூலம் கிராமங்களில் உள்ள மக்களின் வாக்குகளை பெற முடியும். இனவாதத்தை தூண்டி யூனியன் பிளேஸில் இருக்கும் ஆங்கிலம் பேசும் நிறுவனங்களில் வாக்குகளை பெற முடியாது.

இனவாதம் தூண்டப்படும் சம்பவங்களில் ஊடகங்களுக்கு தொடர்பு இருக்கின்றது. அரச ஊடகங்களுக்கு இதில் தொடர்பில்லை. இனவாதத்தை பரப்ப தனியார் ஊடகங்கள் ஒப்பந்தங்களை பெற்றுள்ளன. இதன் காரணமாகவே இலங்கையில் இனவாதம் பிரசாரம் செய்யப்படுகிறது.

வேறு நாடுகளில் இவற்றுக்கு இடமில்லை. இலங்கையில் கட்டுப்பாடு கிடையாது. இந்த விளையாட்டுக் குறித்து அதனை செய்வோருக்கு புரிதல் இல்லை.

இனவாதத்தை தூண்டுவதன் மூலம் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும். எல்லை மீறினால், அதனை கட்டுப்படுத்த முடியாது என்பதே இதற்கு காரணம்.

இலங்கையில் உள்ள கிராம மக்களும், கிராமங்களில் உள்ள புத்திசாலிகளும் இந்த விளையாட்டை நிறுத்த வேண்டும். இல்லையென்றால், சிரியா, ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படும்.

வாக்குகளை பெறவே இனவாதத்தை தூண்டுகின்றனர். இதனை வேறு நபர்கள் கையில் எடுத்தல் என்ன நடக்கும் என்பதை இவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

வருட இறுதியில் நடக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளை பெறவே இவர்கள் இதனை செய்கின்றனர் எனவும் தீப்தி குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.