தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

அம்பாறை மாவட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் இப்போராட்டம் ஆரம்பமாகியிருந்தது.

இதன்போது, 2,500 ரூபாய் சம்பள உயர்வு ஏனைய அரசாங்க ஊழியருக்கு வழங்கப்பட்ட போதும் கல்விசாரா ஊழியர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.

நாடாவிய ரீதியில் இடம்பெற்று வரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பில் எமது தென்கிழக்கு பல்கலைகழகமும் இணைந்து இன்று முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத் தலைவர் மொகமட் நொபர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், எமது கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவிசாய்த்து தீர்த்து தரும் வரை எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜூலை 30ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொண்டிருந்தோம். சம்பந்தப்பட்ட தரப்பினர் எங்களுக்கு சாதகமான பதில் தராததினால் கடந்த ஓகஸ்ட் 28,29ஆம் திகதிகளில் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டிருந்தோம்.

இவற்றை செவிமடுக்காத அரசாங்கம் கூடிய விரைவில் தீர்த்து தரும் வரை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

Latest Offers