ஆற்றுப்பகுதியில் தவறி விழுந்து இளைஞன் உயிரிழப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

கொத்மலை - வெதமுல்ல தோட்டத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் இளைஞன் ஒருவர் இன்று காலை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த தோட்டத்தில் மேற்படி இளைஞன் அவரது பயிர்செய்கையை பார்வையிட்டு வீடு திரும்பும் சந்தர்ப்பத்திலேயே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தவறி விழுந்த இளைஞனை உடனடியாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவைச் சேர்ந்த 24 வயதுடைய ராஜேந்திரன் நவீந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ் சம்பவம் குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.