அடம்பன் மகா வித்தியாலயத்தில் கட்டிடம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா

Report Print Ashik in சமூகம்

அடம்பன் மத்திய மஹா வித்தியாலயத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக மடு பிரதேச கல்விப் பணிப்பாளர், மாந்தை பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு செல்லத்தம்பு, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாகாண பணிப்பாளர் முனவ்வர், அமைச்சரின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான், மாந்தை பிரதேச சபை உறுப்பினர், பாடசாலை நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.