வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தல்

Report Print Vethu Vethu in சமூகம்

சர்வதேச பொலிஸாரினால் தேடப்படும் வெளிநாட்டவர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவரை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நாடு கடத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை இலங்கைக்கு நுழைய முயன்ற கஸகஸ்தான் நாட்டைச் சேர்ந்த 40 வயதான பொட்டபாயேவ் நுர்சான் என்பவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 15 வருடங்களாக கஸகஸ்தான் நாட்டிற்கு செல்லாமல் டுபாயில் தனது மனைவியுடன் வாழ்ந்துள்ளார். கஸகஸ்தான் அரசாங்கம் இவரை கைது செய்வதற்காக சிவப்பு பிடியாணை பிறப்பித்துள்ளமையே இதற்கு காரணமாகும்.

இன்று காலை 8.30 மணியளவில் டுபாயில் இருந்து இலங்கை வந்தவரை நாட்டிற்கு நுழைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவர் இலங்கைக்கு அனுமதிக்க தகுதியானவர் அல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது கடவுச்சீட்டை சோதனையிட்ட போது, அவருக்கு சிகப்பு எச்சரிச்சை விடுக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் கஸகஸ்தான் நாட்டில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

குடிவரவு குடியல்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணையின் போது, தான் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சட்டத்திற்கமைய அவரை நாடு கடத்துவதற்கு கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.