வவுனியாவில் கடவுச்சீட்டு விநியோக சேவைகள் ஸ்தம்பிதம்

Report Print Theesan in சமூகம்

நாடளாவிய ரீதியில் அரச நிர்வாக சேவையை சேர்ந்த ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பணி புறக்கணிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா குடிவரவு, குடியகல்வு திணைக்கள ஊழியர்களும் பணிக்கு வராதமையினால் கடவுச்சீட்டுடன் தொடர்புடைய சேவைகள் இன்றையதினம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

அரச நிர்வாக சேவையை சேர்ந்த ஊழியர்கள் சம்பள முரண்பாடு மற்றும் சில காரணங்களை முன்வைத்து, நாடாளாவிய ரீதியில் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையின் மூலம் பணிபகிஸ்பரில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

அதற்கமைய வவுனியா குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊழியர்களும் பணிக்கு வராதமையினால் அலுவலகத்தின் பணிகள் நிறுத்தபட்டிருந்தது.

இதனால் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.