50 வீதமான பஸ் சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்துகின்றனர்?

Report Print Kamel Kamel in சமூகம்

நாட்டில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களில் 50 வீதமானவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தி வருவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆகியோர் கஞ்சா போதைப் பொருள் பயன்படுத்தி வந்ததாகவும் தற்பொழுது ஐஸ் என்னும் போதைப் பொருளை பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாரதிகளும், நடத்துனர்களும் பயணிகளுக்கு மிகுதிப் பணம் வழங்காது மேலதிக வருமானத்தை ஈட்டிக் கொள்தாகவும் நடத்துனர்கள் நியாயமான அளவு பணத்தை இவ்வாறு சாம்பாதித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

ஐஸ் போன்ற போதைப் பொருட்களுக்கு இவர்கள் அடிமையாகியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உரிய தரிப்பிட வசதிகள் இன்மை, சரியான நேர சூசிகை பின்பற்றப்படாமை மற்றும் வாகன நெரிசல் காரணமாக கடுமையான மன அழுத்தம் போன்ற காரணிகளினால் இவ்வாறு சாரதிகளும், நடத்துனர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர், தேசிய வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் காவல்துறை தலைமையகம் என்பனவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.