பூந்தோட்டம் அருள்மிகு ஶ்ரீ லஷ்மிசமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ தேர்விழா

Report Print Theesan in சமூகம்

வவுனியா - பூந்தோட்டம் அருள்மிகு ஶ்ரீ லஷ்மிசமேத நரசிங்கர் ஆலய மகோற்சவப் பெருவிழா விஞ்ஞாபனம் கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்றையதினம் தேர்திருவிழா நடைபெற்றுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க வவுனியா நகரில் பூந்தோட்டம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளி வழங்குகின்ற ஶ்ரீ லஷ்மிசமேத நரசிங்க பெருமானுக்கு மகோற்சவ பெருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

கடந்த ஒன்பது நாட்களாக நடைபெறும் இந்நிகழ்வில் இன்று தேர்த்திருவிழா மிக கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

இன்றையதினம்,தீர்த்தோற்சவம் நடைபெற்று மகோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.