நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனால் ஆசிரியர் விடுதி திறந்து வைப்பு

Report Print M Tharan in சமூகம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதியை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் திறந்து வைத்துள்ளார்.

கல்வி அமைச்சின் பண்பு, அறிவு மற்றும் வலுமிக்க மனிதநேய மாணவச் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில், அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதி கட்டடமே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சீ.புஸ்பலிங்கம், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.