வவுனியாவில் பற்றியெரிந்த தென்னை மரம்: தீயணைப்பு படையால் பாரிய அனர்த்தம் தவிர்ப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - தேக்கவத்தைப் பகுதியில் உள்ள தொடர் குடியிருப்புக்குள் இருந்த தென்னை மரமொன்று இன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் அமைந்துள்ள தொடர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் குப்பைகளுக்கு வைக்கப்பட்டுள்ள நெருப்பு பற்றி எரிந்த நிலையில் அருகிலிருந்த தென்னை மரம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்தியதுடன், விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்பு பிரிவினர் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இதன்போது அப்பகுதியில் ஏற்பட இருந்த பாரிய அனர்த்தமும் தடுக்கப்பட்டுள்ளது.