மட்டக்களப்பு கல்வி வலய விவகாரம்! நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி பணிப்பாளர் சிவாநந்த சிறீதரன் திருகோணமலை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த ஆணை வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண கல்வி செயலாளரினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள 13 கல்வி வலயங்களுக்கும், புதிய கல்வி பணிப்பாளர்களை நியமிப்பதற்கான விளம்பரம் அரச பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

13 கல்வி வலயங்களுள் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமும் ஒன்றாகும் என தெரிவித்து மட்டக்களப்பு மேற்கு கல்வி பணிப்பாளர் திருகோணமலை மேல் நீதிமன்றில் ஆணை வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

“தான் கடமையாற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உள்ளிட்ட 13 கல்வி வலயங்களுக்கு புதிய கல்வி பணிப்பாளர்கள் நியமிப்பதை தடுத்து நிறுத்தி, பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்திற்கு மேலதிக நடவடிக்கை எடுக்க கூடாது எனவும், இவை தடுத்து நிறுத்துவதற்கும், அவசர மனுவாக ஏற்றுக்கொண்டு எதுவித மேலதிக நடவடிக்கை எடுக்க கூடாது என இடைக்கால தடை விதிக்க கோரி” ஆணை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

எனினும், இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பதற்கான எவ்வித நியாயமான காரணங்களும் மனுவில் குறிப்பிடப்படவில்லை என கடுமையாக உத்தரவிட்ட திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இடைக்கால தடையுத்தரவு கோரிக்கையினை தள்ளுபடி செய்தார்.

மேலும் எதிர் மனுதாரர்களுக்கு அழைப்பு கட்டளை அனுப்பி வைக்கப்பட்டதுடன், இடைக்கால தடையுத்தரவு நிராகரிக்கப்பட்டதினை இணைத்து எதிர் மனுதாரர்களுக்கு அனுப்ப நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Latest Offers