ஆலயத்தில் விளக்கேற்றிய சிறுமிக்கு நேர்ந்த கதி

Report Print Vethu Vethu in சமூகம்

கேகாலையில் ஆலயம் ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்ட சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பத்தினி ஆலயத்தில் விளக்கேற்றிய சிறுமி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு காயமடைந்து சிக்கிச்சை பெற்று வருகின்றார்.

குடும்பத்தினருடன் கேகாலையில் உள்ள பத்தினி ஆலயத்திற்கு பூஜைக்கு சென்ற போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

உறவினர்கள் பூஜை நடத்தும் போது இந்த சிறுமி விளக்கேற்றியுள்ளார். இதன் போது விளக்குகள் மீது சிறுமி தவறி விழுந்துள்ளார்.

சிறுமியின் இரண்டு கால்களிலும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.