மக்களின் பயன்பாட்டுக்கு தாமரை கோபுரம்

Report Print Steephen Steephen in சமூகம்

தெற்காசியாவில் மிகவும் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

350 மீற்றர் உயரமான இந்த தாமரை கோபுரம் 17 மாடிகளை கொண்டுள்ளது.

இதனை நிர்மாணிக்க 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகியுள்ளது. இந்த செலவில் சீனா 80 வீதத்தை செலவிட்டுள்ளது.

ஆடம்பர உணவகங்கள், விடுதிகள், கூடங்கள் மற்றும் மண்படங்கள் என்பன தாமரை கோபுரத்தில் அமைந்துள்ளன.

இத் திறப்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட பலர் கலந்துக்கொள்ள உள்ளனர்.

Latest Offers