வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி

Report Print Steephen Steephen in சமூகம்

கண்டி - கொழும்பு வீதியின் உத்துவன்கந்த பிரதேசத்தில இன்று அதிகாலை நடந்த வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற எரிபொருள் கொள்கலன் வண்டியும் மாவனெல்லை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ஜீப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஜீப் வண்டியில் பயணித்த உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆகியோர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடுகன்னாவை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான பொலிஸ் உத்தியோகஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.