தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் கையளிப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் என அரச புலனாய்வு சேவையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாறை பொலிஸார் கைது செய்தது, தடுப்பு காவலில் வைத்திருந்த ஜமாத்தே மில்லதே இப்ராஹிம் என்ற அமைப்பின் 11 உறுப்பினர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் நேற்றைய தினம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மொஹமட் மன்சூர் செய்புல்லா, மொஹம்மது ரியால் மொஹம்மது சாஜித், முஸ்தாக் அலி அம்ஹர், மொஹம்மது தாஹீர் இதயதுல்லா, மொஹம்மது ரம்சீன் அஹமட், மொய்தீன் பாவா மொஹம்மது ருமி, அப்துல் ஹலீம் மொஹமட் ஹிமாஸ், மொஹமட் காசிம் மொஹமட் அகில், ஹிஸ்புல்லா பாஸ் ஹூஸ்னி அஹமட், மொஹம்மது சாஹீர் மொஹம்மது அஹ்சன், மொஹம்மது அவுதாக் அனீஸ் மொஹமட் ஆகிய சந்தேக நபர்களே மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.