இராணுவத்தினரை தாக்கி விட்டு தப்பிச் சென்ற இளைஞர்கள் - புதுக்குடியிருப்பில் சம்பவம்

Report Print Steephen Steephen in சமூகம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்துவில் இராணுவ முகாமை சேர்ந்த படையினர் சிலரை பிரதேச இளைஞர்கள் சிலர் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் மூன்று தினங்ளுக்கு முன்னர் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து இராணுவத்தினர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் நடத்திய விசாரணைகளை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் கடந்த 8 ஆம் திகதி இரவு 1 சென்ற சிலர், இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.