வவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கத்தில் நீர் வற்றியுள்ளதினால் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, தேக்கவத்தை, கற்குழி, வவுனியா நகரம், யாழ் வீதி, குடியிருப்பு, இலுப்பைக்குளம், மூன்று முறிப்பு, மதவுவைத்தகுளம், சூசைப்பிள்ளையார் குளம், கோவில்குளம், தெற்கிலும்பைக்குளம், தோணிக்கல், வெளிக்குளம், அம்பலாங்கொடல, மடுகந்த உள்ளிட்ட பகுதிகளில் இந்த நீர் விநியோக மட்டுப்படுத்தல் மேற்கொள்ளப்படும்.
எனவே, சிக்கனமாக நீரைப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.