திருகோணமலை - சமுத்திரா கம பகுதியில் உள்ள வீடொன்றில் மான் இறைச்சி விற்பனை செய்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் இன்று அதிகாலை குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, அனுமதிப் பத்திரமின்றி மான் இறைச்சி விற்பனை செய்து கொண்டிருந்த இருவருடன், மூன்றரை கிலோ கிராம் இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகா திவுளு வெவ பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 27 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சந்தேக நபர்களையும், இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இறைச்சியையும், திருகோணமலை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.