கொழும்பு - கணபதி இந்து மகளிர் பாடசாலையின் கட்டிட திறப்பு விழா

Report Print Akkash in சமூகம்

கொழும்பு - கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின் மூன்று மாடிக் கட்டிட திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இவ்விழா பாடசாலையில் இன்று காலை 9 மணியளவில் பாடசாலை அதிபர் வீ.சாந்தினி தலைமையில் ஆரம்பமாகியிருந்தது.

இதன்போது அமைச்சர் மனோ கணேசன் பிரதம அதிதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கௌரவ அதிதியாகவும், கொழும்பு வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.என்.சில்வா சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers