பாரதியாரின் 98ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

Report Print Theesan in சமூகம்

மகாகவி பாரதியாரின் 98ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா - குருமன்காடு சந்தியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலை முன்பாக இன்று காலை 8.30மணியளவில் இந்நினைவு தின நிகழ்வு நடைபெற்றுள்ளது.

வவுனியா நகரசபையின் செயலாளர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாரதியாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்படதுடன், அக வணக்கம் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது தமிழ் பற்று மற்றும் சுதந்திர வேட்கை தொடர்பான கருத்துரைகளை தமிழருவி சிவகுமாரன், தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராசா, க.சந்திரகுலசிங்கம், ரி.கே.ராஜலிங்கம், பா.பிரசன்னா, சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், பொதுஅமைப்பினர், சமூக ஆர்வலர்கள் அப்பகுதி வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.