தீவிரவாதம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது - அமெரிக்கா அறிவிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின் நினைவேந்தலில், இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

18 வருடங்களுக்கு முன்னர் 9/11 தாக்குதல்கள் இடம்பெற்ற இன்றைய தினத்தில் உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூரப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“எந்தவொரு இடத்திலும், எந்தவொரு வழிமுறைகளிலும் இடம்பெறும் தீவிரவாதம் என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. அமெரிக்காவில் இடம்பெற்ற 9/11 தாக்குதல்களிலும், இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களிலும் உயிரிழந்தவர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் இன்றைய தினத்தில் நினைவு கூருகின்றோம். தீவிரவாதத்தைப் புறக்கணித்து, சமூக ஒற்றுமைக்கு வரவேற்பளித்து அதனை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல்கள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கு இலங்கையுடனும், மாலைதீவுடனும் நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம்” என தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.