மது போதையில் இருந்த பாடசாலை வான் சாரதிகள்! பொலிஸாரின் நடவடிக்கை

Report Print Steephen Steephen in சமூகம்

மதுபானம் அருந்தி விட்டு பாடசாலை மாணவர்களை அழைத்துச் சென்ற நுகேகொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் இருந்த இரண்டு சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்ட இவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை மேலதிக நீதவான் ஹரிஸ்சந்திர பெல்பொல இன்று உத்தரவிட்டுள்ளார்.

பிலியந்தலையைச் சேர்ந்த இந்திக சுதத் என்பவரும் பாதுக்கை பிரதேசத்தை சேர்ந்த ஷாந்த லலித் என்பவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் வான் சாரதிகள் மதுபானம் அருந்தி இருப்பதாக கொஹூவலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஓட்டிச் செல்லவிருந்த வான்களில் 22 மாணவிகள் இருந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.