மஹிந்தவை போன்றே பேசி அசத்திய சிறுவன்! மகிழ்ச்சியில் ராஜபக்ஷ குடும்பம்

Report Print Kamel Kamel in சமூகம்

எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவை போன்றே பேசி சிறுவன் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளான்.

இந்த சிறுவன் மஹிந்த போன்றே மஹிந்தவிடமே பேசிக் காண்பித்துள்ளான்.

இது குறித்த காணொளியொன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.

“நூறு நட்களில் மெட்ச் அடிக்க முடியும் என்றே அரசாங்கத்தை பொறுப்பேற்றுக் கொண்டீர்கள்? இப்போழுது முடிந்ததா? நாம் எழுப்பும் கேள்வி இப்பொழுது சுகமா?” என சிறுவன் மிமிக்கிரி செய்து அசத்தியுள்ளான்.

மஹிந்த ராஜபக்ச போன்று சிறுவன் மிமிக்கிரி செய்து அசத்தும் போது மஹிந்தவின் புதல்வர்களான நாமல் ராஜபக்ச, ரோஹித ராஜபக்ச மற்றும் மஹிந்தவின் பிரத்தியேக செயலாளர் உதித்த பண்டார சிரித்து மகிழும் காட்சிகள் டுவிட்டர் பதிவொன்றில் வலம் வருகின்றது.