வடக்கு மற்றும் கிழக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா? வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை வளாகத்தில் இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் வைத்தியர்களின் இடமாற்றத்தின் போது இவ்வளவு நாளும் இருந்து வந்த முறைமையை மாற்றி, புதிய முறை ஒன்றை உட்புகுத்துவதற்கு சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்தின முனைகின்றார் எனவும், அது அவரது அரசியல் அனுகூலங்களிற்காகவே எனவும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களினால் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய வைத்தியர் பற்றாகுறை ஏற்படுவதுடன், கஷ்டப்பட்ட பிரதேசங்கள் வெகுவாக பாதிப்பை சந்திக்கும். எனவே, மருத்துவர்களின் இடமாற்ற விடயத்தில் எந்தவித அரசியல் தலையிடும் இன்றி சுயாதீனமான நிலையை ஏற்படுத்த வேண்டும் இல்லாவிடில் தமது போராட்டம் தொடரும் எனவும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா? , விரைவில் இங்கு பாரிய வைத்தியர் பற்றாகுறை, இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.