மூத்த கலைஞர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவு

Report Print Steephen Steephen in சமூகம்

60 வயதிற்கும் மேற்பட்ட சிரேஷ்ட கலைஞர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 200 சிரேஷ்ட கலைஞர்களுக்கு இந்த கொடுப்பனவும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசாங்கம் கலைஞர்களுக்காக ஒதுக்கியுள்ள 94 மில்லியன் ரூபாய் நிதியில் கிடைக்கும் வட்டியில் இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது. கலாசார அமைச்சு மற்றும் சமூக பாதுகாப்புச் சபை ஆகியவற்றின் ஊடாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய தேசிய கலைஞர்கள் ஒன்றியம், பாடகர்கள் சங்கம், தேசிய கலைஞர்கள் ஒன்றியம், மொறட்டுவை கலைஞர்கள் ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்ட கூட்டம் ஒன்று ஆரம்பக் கைத்தொழில் அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றதுடன் அந்த கூட்டத்தில் அமைச்சர் தயா கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.