பிக்கு மாணவர்களை தாக்கிய இளைஞனுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

Report Print Malar in சமூகம்

பிக்கு மாணவர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுராதபுரம் - பதவிய சுற்றுலா நீதவான் ஹர்சன அல்விஸ் முன்னிலையில் இன்று குறித்த இளைஞரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் அனுராதபுரம், ஹொரவப்பொத்தான பகுதியைச் சேர்ந்த “உட்டியா” சமிந்தா கலபோடா என்பவர் எனத் தெரியவருகின்றது.

இவரை பொலிஸார் கைது செய்திருந்த நிலையில், இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.