யாழ் பருத்தித்துறையில் திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்! கட்டுப்படுத்த போராடிய மக்கள்

Report Print Vethu Vethu in சமூகம்
1508Shares

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீயில் எரிந்துள்ளன.

வல்லிபுர பரியாரி வீதியில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 6.45 மணியளவில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக பேருந்து ஒன்று முழுமையாக எரிந்துள்ள நிலையில், ஹையேஸ் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் எரிந்துள்ளது.

அந்தப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் பேருந்து முழுமையாக எரிந்துள்ளது.

இத் தீப்பரவல் அருகிலிருந்த வீட்டின் மீதும் பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.