கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு வேலைத்திட்டங்கள்

Report Print Kumar in சமூகம்

கம்பரெலிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

காரைநகர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள வேலை திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு காரைநகரில் இடம்பெற்றுள்ளது.

காரைநகர் கலாநிதி விளையாட்டுக் கழகத்திற்கு சுமார் இரண்டு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்திற்கான அடிக்கல்லும் இதன்போது நாட்டப்பட்டுள்ளது.

இதன்போது கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டி வைத்துள்ளனர்.