கள்ளுத்தவறணையை மூடுமாறு கோரி கந்தன்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, பூவரசன்குளம், கந்தன்குளம் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணையை மூடுமாறு கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டமானது கள்ளுத் தவறணைக்கு முன்பாக சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.

வவுனியா, பூவரசன்குளம், கந்தன்குளம் சந்திப் பகுதியில் கள்ளுத் தவறணை ஒன்று அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த பகுதியில் பேரூந்துக்கு காத்து இருப்பவர்களும், அவ் வீதி வழியாக பயணிக்கும் பாடசாலை மாணவிகள் உட்பட பலரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், குறித்த பகுதியில் சமய வழிபாட்டு தளம் ஒன்றும் காணப்படுகின்றது.

இதன்காரணமாக குறித்த பகுதியில் கள்ளுத் தவறணை அமைக்கப்பட்டுள்ளமை கிராமத்தின் காலாசாரத்தை பாதித்துள்ளதுடன், விரும்பத்தாகாத அசாம்பாவிதங்கள் ஏற்பட வழிவகுக்கும் என தெரிவித்த கிராம மக்கள், வறுமையான தமது கிராமத்திற்கு கள்ளுத் தவறைணையை திறந்து மக்களை அழிக்காதீர்கள் எனத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ' பனை தென்னை வள அபிவிருத்தி சங்கத்திற்கும் உற்பத்திப் பொருட்களுக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல, மாற்றிடத்தை தெரிவு செய், கள்ளுக் கடையை அகற்ற கால அவகாசம் வேண்டாம், வேண்டாம் கள்ளுக் கடை வேண்டும் நூலகம், கந்தன்குளம் சந்தியை கள்ளுத்தவறணை சந்ததி ஆக்காதே' உள்ளிட்ட பல்வேறு வாசங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் பா.உதயராஜா, அப்பகுதி கிராம அலுவலர் ஆகியோர் சென்று கலந்துரையாடியதுடன், உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி கள்ளுதவறைணையை அகற்றுவதாக வழங்கிய வாக்குறுதியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. குறித்த போராட்டத்தில் கந்தன்குளம் மக்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.