எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி

Report Print Theesan in சமூகம்

எழுக தமிழ் மக்கள் எழுச்சி போராட்டத்திற்காக மக்களை அணி திரட்டும் முகமாக விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வானது வவுனியா நகரை அண்டிய பகுதிகள் மற்றும் பேருந்து நிலையங்கள், சனநடமாட்டம் உள்ள பகுதிகள் அத்துடன் செட்டிகுளம் பகுதிகளிலும் இவ் பிரச்சார நடவடிக்கை வவுனியா மாவட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்மக்கள் கூட்டணியினரால் இன்று காலை 9மணியிலிருந்து மாலை 3.30மணி வரையும் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்கள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் , தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.