வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரதப் பாதை: அச்சத்துடன் மக்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் புகையிரதக் கடவையால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடவையில் புகையிரத பாதுகாப்பு வேலி பொருத்தப்படவில்லையெனவும், அப்பகுதியில் ஒலி, ஒளிச் சமிக்ஞை பொருத்தப்பட்டுள்ள போதும், குறித்த ஒலி, ஒளி சமிக்ஞை சீராக இயங்காமையாலும், அவை பழுதடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக குறித்த வீதியில் பயணிக்கும் பயணிகளும்,வாகன சாரதிகளும் புகையிரத சத்தத்தின் பின்னரே தமது பயணத்தை நிறுத்த வேண்டிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வடக்கிற்கான புகையிரத சேவைகள் அதிகரித்துள்ள நிலையில், இவ்வாறு பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஒரு சந்தியில் காணப்படுகின்றமை மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.

எனவே, இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அவ்வீதி வழியாக தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் கோரிக்கையாகும்.

இதேவேளை, குறித்த பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் கடந்த வருடம் ஒருவர் மரணமடைந்தமையும், கால் நடைகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers