ரத்துபஸ்வல வழக்கு தொடர்பில் ஆராய விசாரணை குழு நியமனம்

Report Print Ajith Ajith in சமூகம்

ரத்துபஸ்வல வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் கம்பஹா உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார்.

குறித்த வழக்கினை விசாரணை செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர (தலைவர்), நிமல் ரணவீர மற்றும் நிஷாந்த ஹபுவாராச்சி ஆகியோரைக் கொண்ட ஒரு விசாரணை குழுவை தலைமை நீதிபதி நியமித்துள்ளார்.

இந்நிலையிலேயே சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரத்துபஸ் வல பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்குமாறு கோரி ஆகஸ்ட் 1, 2013 அன்று போராட்டக்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 3 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மற்றும் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.