களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை

Report Print Kumar in சமூகம்

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் எதிர்வரும் சில தினங்களில் சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கியத்துவமான வைத்தியசாலையாகும்.கடந்த கால போர்ச் சூழலில் மக்களின் சுகாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய வைத்தியசாலையாகும்.

அதன் பௌதீக வளங்கள் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டாலும் இன்னும் பல்வேறு பிரச்சினைகள் அங்கு காணப்படுகின்றன. அவற்றினை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவினரும், வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கட்டட திறப்பு விழாவுக்கு சுகாதார அமைச்சர் வருகை தந்த போது என்னால் அங்கு செல்ல முடியாத நிலையிலும், சுகாதார அமைச்சரின் செயலாளருடன் தொடர்புகொண்டு வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவினரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன்.

சுகாதார அமைச்சில் அமைச்சரை நேரடியாக சந்தித்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன்.

அதன் ஒரு கட்டமாக சில தினங்களில் சுகாதார அமைச்சரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers