வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட காலிறுதி ஆட்டங்கள் ஆரம்பம்! வெல்லப்போவது யார்?

Report Print Dias Dias in சமூகம்

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 60 லீக் முறையிலான ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் நாளை மறுதினம் (13.09.2019) முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு காலிறுதிப்போட்டிகள் நடைபெற உள்ளன.

குறித்த காலிறுதிப்போட்டிகள் அனைத்தும் யாழ்.துரையப்பா மைதானத்தில் இரவு ஏழு மணிக்கு மிக கோலாகாலமாக ஆரம்பமாகவுள்ளது.

இந்த காலிறுதி போட்டிகளின் இறுதியில் நான்கு அணிகள் தெரிவாகி அரையிறுதி ஆட்டங்கள் சுவாரஸ்யமாக இடம்பெறவுள்ளது.

இதன் அடிப்படையில் ஏதோவொரு அணி விலகல் ஆட்டத்தின் ஊடாக போட்டிகளிலிருந்து விலகவுள்ளது.

இந்நிலையில் முதலாவது காலிறுதி ஆட்டத்தில் ரில்கோ கெங்கியூறஸ் அணியை எதிர்த்து கிளியூர் கிங்ஸ் அணி மோதவுள்ளது.

14ஆம் திகதி வல்வை எப்.சி அணியை எதிர்த்து மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் அணி மோதவுள்ளது.

15ஆம் திகதி நொதேன் எலைட் அணியை எதிர்த்து முல்லை பொனெக்ஸ் அணி மோதவுள்ளது.

16ஆம் திகதி தமிழ் யுனைட்டட் அணியை எதிர்த்து வவுனியா வொறியஸ் அணி மோதவுள்ளது.

இறுதிப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐந்தாம் திகதி மிக கோலாகாலமாக விறுவிறுப்புடன், பரபரப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.